பிரிண்டிங் கணக்கீட்டு கருவிகள்
அளவு மாற்றவும், படத்தின் அச்சுத் தெளிவை மதிப்பிடவும், விலை கேட்க தேவையான விவரங்களைத் தயாரிக்கவும். கணக்கீடுகள் உங்கள் browser-லேயே நடக்கும்.
அளவு மாற்றி
அடி, அங்குலம், செ.மீ., மி.மீ. இடையே அகலம் × உயரம் மாற்றுங்கள்.
அளவு கணக்கீடு மட்டும். மடிப்பு, ஓரம், பொருத்தும் இடத்தை தனியாக உறுதி செய்யுங்கள்.
படத்தின் அச்சுத் தெளிவு
உங்கள் படத்தின் pixel அளவும் அச்சு அளவும் கொடுத்தால் effective PPI கிடைக்கும்.
PPI மட்டும் தரத்தை நிர்ணயிக்காது. படம் மங்கலா, compression, பார்க்கும் தூரம், பிரிண்ட் முறை ஆகியவற்றையும் சோதிக்கவும்.
ஆர்டர் விவரப் பட்டியல்
விலை கேட்கும்போது தவறாமல் அனுப்ப வேண்டிய தகவல்களை ஒரே இடத்தில் தயாரிக்கவும்.
இங்கே உள்ள விவரம் எங்கும் தானாக அனுப்பப்படாது. Copy செய்து உங்கள் விருப்பப்படி பகிரலாம்.
கணக்கீட்டைப் பயன்படுத்துவது எப்படி?
1 அடி = 12 அங்குலம்; 1 அங்குலம் = 2.54 செ.மீ. PPI என்பது ஒரு அங்குலத்தில் வரும் பட pixels. எடுத்துக்காட்டாக 3000 px அகலப் படத்தை 10 அங்குல அகலத்தில் அச்சிட்டால் 300 PPI கிடைக்கும். அதே படத்தை 20 அங்குல அகலத்தில் அச்சிட்டால் 150 PPI கிடைக்கும். சுவர் பேனரைத் தொலைவில் பார்க்கும் போது ஏற்ற தெளிவு, கையில் பிடித்துப் பார்க்கும் கார்டிலிருந்து வேறுபடும். இறுதி அச்சு தரத்தை print provider-உடன் உறுதி செய்யுங்கள்.